ADDED : நவ 29, 2026 01:16 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி மேல் காலனியில், 150 வீடுகள் உள்ளன.
அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுநீர், மழைநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லை. இதனால் ஊராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்ட, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு பணி நடந்தது. அங்கு அரசு தரிசு நிலத்துக்கு மத்தியில் தனியார் பட்டா நிலம் உள்ளதால், கால்வாய் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'கால்வாய் அமைப்பதற்கான நிலத்தை, மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி தர வேண்டும்' என்றனர்.
