/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்வாய் பணி நிறுத்தம் மக்கள் சாலை மறியல்
/
கால்வாய் பணி நிறுத்தம் மக்கள் சாலை மறியல்
ADDED : நவ 09, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி:இடைப்பாடி,
அங்காளம்மன் கோவில் தெருவின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய், சிறு,
சிறு பகுதிகளாக அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், கோவில்
எதிரே உள்ள ஒருவர், கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பணி
நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி,
இடைப்பாடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று,
மேட்டுத்தெருவில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இடைப்பாடி
போலீசார், பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
அளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.

