/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமி மாயமான புகாரில் நடவடிக்கை இல்லை பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்

ADDED : நவ 09, 2025 04:58 AM
வாழப்பாடி:வாழப்பாடி,
கொட்டவாடியை சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 2 முடித்துள்ளார். அவரை
கடந்த, 25 காலை, முதல் காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்
புகார்படி, வாழப்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
நேற்று
காலை, 10:00 மணிக்கு, மகளிர் ஸ்டேஷனுக்கு சென்ற சிறுமியின் பெற்றோர்,
மகளை மீட்டுத்தரும்படியும், புகார் தொடர்பான நடவடிக்கை குறித்தும்
கேட்டனர். அதற்கு போலீசார், அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இதனால்
மதியம், 2:45 மணிக்கு, கொட்டவாடி அரசு பள்ளி எதிரே, அரசு டவுன் பஸ்சை
சிறைபிடித்து, சிறுமியின் பெற்றோர், உறவினர் கள், சாலை மறியலில்
ஈடுபட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் பேச்சு நடத்தி, 'சிறுமியை மீட்க
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என உறுதி அளித்தனர். பின்
மதியம், 3:00 மணிக்கு, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து
போலீசார் கூறுகையில், 'சிறுமியுடன், பிளஸ் 2 படித்த, மற்றொரு சிறுமி
தோழியாக இருந்தார். கடந்த, 25ல், அந்த தோழியுடன் சென்றதாக
தெரிகிறது. இருவர் குறித்தும் விசாரிப்பதோடு, பல்வேறு இடங்களில்
தேடி வருகிறோம்' என்றனர்.