/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து பார்வையற்றோர் கொந்தளிப்பு
/
4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து பார்வையற்றோர் கொந்தளிப்பு
4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து பார்வையற்றோர் கொந்தளிப்பு
4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து பார்வையற்றோர் கொந்தளிப்பு
ADDED : நவ 11, 2025 02:00 AM
சேலம், தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்க மாநில பொருளாளர் பரமசிவம், உறுப்பினர் சவுண்டப்பன் உள்ளிட்டோர், கலெக்டர் அலுவலகம் வழியாக, முதல்வருக்கு அனுப்பி வைக்க நேற்று வழங்கிய கோரிக்கை மனு விபரம்:
மாற்றுத்திறனாளிகளுக்கு, சட்ட பூர்வமாக வழங்கப்பட்ட நிரந்தர பணி வரன்முறை மற்றும் வேலை வாய்ப்பில், 4 சதவீத இட ஒதுக்கீடு பணியிடத்தை நிரப்பும் அரசாணையை ரத்து செய்து, தேவையற்ற வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அனுமதித்திருப்பது, ஒட்டுமொத்த பார்வையற்றவர்களின் சட்ட உரிமைகளை பறிக்கும் செயலாகும். கண்டிக்கதக்கதும் கூட. எனவே, அந்த உத்தரவை, நிபந்தனையின்றி திரும்பபெற வேண்டும். அரசு துறைகளில், 2 ஆண்டுக்கு மேல், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பார்வையற்றோர் உள்ளிட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி, பணியை வரன்முறை செய்ய வேண்டும்.
தற்போது வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, 1,500 ரூபாயை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்குதல். பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும், 130க்கும் அதிகமான பார்வையற்ற புத்தக கட்டுனர்களுக்கு, அரசு அச்சகம், பதிப்பகம், நுாலகங்கள் ஆகியவற்றில், சிறப்பு திறனுக்கு ஏற்ப, நிரந்தர பணி வழங்கிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பார்வையற்ற இளைஞர்கள் திறன் மேம்பட நிரந்தர பயிற்சி மையங்களை நிறுவ வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

