ADDED : நவ 11, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், கஞ்சா விற்றவருக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலுார், காகிதபட்டறை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு, 45. இவர் கடந்த 2017 நவ., 3ல், வேலுார், ஆற்காடு ரோடு பகுதியில், கஞ்சா விற்பனை செய்யும் போது, வேலுார் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து, 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு, சேலம் போதைபொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ராமுக்கு ஒரு மாதம் சிறை, ரூ.4,000 அபராதம் விதித்து, நீதிபதி ராமகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.

