ADDED : செப் 30, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம் வழி செல்லும் ரயில்களில், கஞ்சா, புகை-யிலை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க, ஆர்.பி.எப்., - தமிழக ரயில்வே போலீசில் தனிப்-படை அமைத்து சோதனை நடக்கிறது.
அதன்படி நேற்று, நியூடில்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜோலார்பேட்டையில் ஏறி சோதனை செய்ததில், முன்பதிவில்லா பெட்-டியில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து சோதனை செய்தனர். அதில், 8 கிலோ புகை-யிலை பொருட்கள், 700 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்ததால், பறிமுதல் செய்தனர். அதேபோல் பிலாஷ்பூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில், கேட்பாரற்று கிடந்த பையில், 9 கிலோ புகையிலை பேஸ்ட், 3.8 கிலோ புகை-யிலை பொருட்கள் இருந்ததால் பறிமுதல் செய்து, சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள்
விசாரிக்கின்றனர்.
