/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கஞ்சா பறிமுதல்: 5 பேருக்கு 'காப்பு'
/
கஞ்சா பறிமுதல்: 5 பேருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 20, 2025 01:42 AM
சேலம்:
சேலம், பொன்னம்மாபேட்டை, கார்பெட் தெருவை சேர்ந்தவர் அமீர்ஜான், 38. நேற்று முன்தினம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்றபோது, அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ஆட்டோ, 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் அன்னதானப்பட்டி, சண்முகா தெருவை சேர்ந்தவர் ராமு, 42. இவர் கந்தம்பட்டி அருகில், நேற்று முன்தினம் கஞ்சா விற்றபோது, சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரிடம், 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சேலம், மேட்டுக்காரனுார், இந்திரா நகரை சேர்ந்த ராஜ்கமல், 25, வீட்டில், நேற்று முன்தினம் கருப்பூர் போலீசாஆய்வு செய்து, 1.05 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ராஜ்
கமலை கைது செய்தனர்.
கெங்கவல்லி போலீசார் நேற்று கடம்பூர் சாலையில் ஆய்வு செய்தபோது, இருவர் கஞ்சா பொட்டலம் வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. விசாரணையில், 74.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிவா, 23, விக்னேஷ், 25, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.