ADDED : நவ 17, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், அழகாபுரம் போலீசார், நேற்று முன்தினம் நகரமலை அடிவாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து அவரது பையை சோதனையிட்டதில், 1.2 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் பள்ளிகாலனியை சேர்ந்த ராம்பிரசாத், 21, என்பதும், கஞ்சாவை விற்க முயன்றதும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
