கல்வெட்டை மறைத்து கம்பி எம்.பி.,யிடம் புகாரால் அகற்றம்
கல்வெட்டை மறைத்து கம்பி எம்.பி.,யிடம் புகாரால் அகற்றம்
ADDED : நவ 17, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்; ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே, கள்ளக்குறிச்சி, எம்.பி., மலையரசன், தொகுதி மேம்பாடு நிதியில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அங்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி, எம்.பி., மலையரசன் பெயர்களுடன் கல்வெட்டு இருந்தது. அந்த கல்வெட்டை மறைத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நேற்று, இரவில் ஒளிரும் ஸ்டிக்கருடன் இரும்பு கம்பியை, கான்கிரீட் மூலம் அமைத்தனர்.
இதுகுறித்து, தி.மு.க.,வை சேர்ந்த, 10வது வார்டு கவுன்சிலர் ஜீவா, நேற்று இரவு, 9:00 மணிக்கு, எம்.பி., மலையரசனிடம் புகார் தெரிவித்தார். அவர் உடனே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், கேள்வி எழுப்பினார். இதனால் இரவு, 10:30 மணிக்கு பெயர் பலகையை மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பி, கான்கிரீட்டை, நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
