தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்


UPDATED : அக் 27, 2026 07:11 PM

ADDED : அக் 27, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 07:11 PM ADDED : அக் 27, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க, ரயில்வே போலீசில் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று (அக்.,27) நியூ டெல்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப்படை போலீசார், ஜோலார்பேட்டையில் ஏறி, சேலம் வரை சோதனை நடத்தினர்.

அதில், பின்பக்க முன்பதிவில்லா பொது பெட்டியில், கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்தனர். அதில், 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த பயணியரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை, சேலம் ரயில்வே போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.

சேலம், அன்னதானப்பட்டி காத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 23, இவரது மனைவி தேவகியிடம், நேற்று (அக்.,26) இரவு மது போதையில் சந்தோஷ் தகராறு செய்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள், அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு வந்தனர்.

போலீசார் வருவதை அறிந்த சந்தோஷ் தப்பினார். சந்தேகமடைந்த போலீசார், சந்தோஷ் வீட்டில் சோதனை செய்தபோது, ஒரு பையில், 2 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய சந்தோசை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us