ADDED : நவ 28, 2026 06:47 AM

அ நிறம் | அளவு
வாழப்பாடி:கெங்கவல்லியை
சேர்ந்தவர் பிரகாசம், 40. இவர் உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட,
'நிசான் டெரானோ' காரில், உறவினருடன், நேற்று காலை, 11:27 மணிக்கு,
சேலம் அரசு மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மேட்டுப்பட்டி
சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் புகை
வந்தது. பிரகாசம் காரை ஓரங்கட்டி, உறவினருடன் இறங்கினார். உடனே கார்
தீப்பற்றி எரிந்தது. உடனே வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு
தகவல் கொடுத்தார்.
காலை, 11:35 மணிக்கு அங்கு சென்ற தீயணைப்பு
வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். இருப்பினும் கார்
முழுதும் எரிந்து கருகியது. வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'இஞ்ஜினில் ஆயில் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது' என்றனர்.
