தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாக்காளர் திருத்த பட்டியல் நாளை 3வது சிறப்பு முகாம்

வாக்காளர் திருத்த பட்டியல் நாளை 3வது சிறப்பு முகாம்

வாக்காளர் திருத்த பட்டியல் நாளை 3வது சிறப்பு முகாம்


ADDED : நவ 28, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கான, 3வது சிறப்பு முகாம், நாளை நடக்க உள்ளது.

மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 3,468 மையங்களில், காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை முகாம் நடத்தப்பட உள்ளது.

பெயர் சேர்க்க படிவம் - 6, நீக்க படிவம் - 7, குடியிருப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்தல், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம் - 8ஐ பயன்படுத்தலாம். முகாம் நிறைவுக்கு பிறகும், தொடர்ந்து, டிச.,11 வரை, மனுக்கள் பெறப்படும்.

அவை அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, 2027 ஜன., 4ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என, கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us