/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஜி - மேப்'பை பார்த்து ஓட்டியதால் மேம்பால தடுப்பில் மோதிய கார்
/
'ஜி - மேப்'பை பார்த்து ஓட்டியதால் மேம்பால தடுப்பில் மோதிய கார்
'ஜி - மேப்'பை பார்த்து ஓட்டியதால் மேம்பால தடுப்பில் மோதிய கார்
'ஜி - மேப்'பை பார்த்து ஓட்டியதால் மேம்பால தடுப்பில் மோதிய கார்
ADDED : மே 29, 2025 01:49 AM
சேலம் :பெங்களூருவை சேர்ந்தவர் நாகராஜ், 45. இவர் சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, விலை உயர்ந்த ஊசி, மருந்துகளை எடுத்துக்கொண்டு, 'ஸ்விப்ட்' காரில் வந்து கொண்டிருந்தார். மருத்துவமனைக்கு செல்ல, 'கூகுள் மேப்'பை பார்த்துக்கொண்டே வேகமாக வந்தார்.
நேற்று காலை, 6:30 மணிக்கு, சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே பெரியார் மேம்பாலத்தில் வந்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தில் இருந்து விழாமல் இருப்பதற்காக, பால சாலையின் தடுப்பில் மோதச்செய்தார். இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. டவுன் போலீசார், நாகராஜை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரை மணி நேரத்துக்கு பின், கார் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.