ADDED : ஜூலை 17, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் அம்மாபேட்டையில் இருந்து, பொன்னம்மாபேட்டை செல்லும் ரயில் தண்டவாளத்தில் நேற்று காலை, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.
சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்தவர் பொன்னம்மா பேட்டை சக்தி நகரை சேர்ந்த கார் டிரைவர் பிரபு, 36, என்பது தெரியவந்தது.
இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.பிரபுவிற்கு கடந்த 2021ல் திருமணம் ஆன நிலையில், சில மாதத்தில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்து வந்த பிரபு, நேற்று முன்தினம் இரவு மது போதையில் தண்டவாளத்தில் படுத்து துாங்கியதும், நேற்று காலை அவ்வழியாக வந்த சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.