/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 26 பெண் தொழிலாளர் காயம்
/
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 26 பெண் தொழிலாளர் காயம்
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 26 பெண் தொழிலாளர் காயம்
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து: 26 பெண் தொழிலாளர் காயம்
ADDED : செப் 27, 2025 01:47 AM
மேட்டூர், கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சி, மூலமெத்தை ஓடையில் புதர்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் பெண் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர். பின் மாலை, 4:30 மணிக்கு வீடு திரும்ப, டவுன் பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்தனர். பஸ் வராததால் ஏமாற்றம் அடைந்த தொழிலாளர்கள், அந்த வழியே சென்ற சரக்கு வேனில் ஏறி புறப்பட்டனர். காவலாண்டியூரை சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன், 35, ஓட்டினார்.
அதிக பாரத்துடன் சென்று கொண்டிருந்தது. மூலப்பனங்காட்டில் சென்றபோது, எதிரே பைக் வர, கிருஷ்ணன் ஓரமாக செல்ல முயன்றார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் கவிழ்ந்தது. கிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கண்ணாமூச்சியை சேர்ந்த, 26 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்து, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 3 பேர் மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.