/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனத்துறையினரை தாக்கிய வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு
/
வனத்துறையினரை தாக்கிய வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு
வனத்துறையினரை தாக்கிய வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு
வனத்துறையினரை தாக்கிய வி.சி., நிர்வாகிகள் மீது வழக்கு
ADDED : அக் 13, 2024 07:48 AM
ஆத்துார் : சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே முட்டல் ஏரி, ஆணைவாரி நீர்வீழ்ச்சி, வனத்துறை சூழல் சுற்றுலா திட்டத்தில் செயல்படுகிறது. நேற்று முன்தினம் மதியம், அம்மம்பாளையத்தைச் சேர்ந்த வி.சி., கட்சி ஆத்துார் ஒன்றிய செயலர் ராஜிவ்காந்தி, 40, கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி துணை செயலர் நேசத்தமிழன், 42, இரு கார்களில் வந்தனர்.
உள்ளே செல்ல, நுழைவுச் சீட்டு வாங்க மறுத்து வனத்துறையினருடன் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகள் பேசினர். வனத்துறையினர் அனுமதிக்க மறுத்த நிலையில் ஏரி, பூங்காவுக்குள் சென்று குடிலில் அமர்ந்து சாப்பிட்டனர். மாலையில் வந்த, ஆத்துார் வனச்சரகர் ரவிபெருமாள் உள்ளிட்ட குழுவினர், 'இங்கு குடிக்கக்கூடாது; உள்ளே வர டிக்கெட் எடுத்திருந்தால் காட்டுங்கள்' என, கேட்டனர்.
அப்போது, இருவரும் ரவிபெருமாள் உள்ளிட்ட வனத்துறையினரை தகாத வார்த்தை பேசி, சீருடையைப் பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர். இதில், தற்காலிக பணியாளர் குன்னுார் முருகன், 27, காயமடைந்தார். இந்நிலையில், வனத்துறையினரை தாக்கிய வீடியோ பரவியது. வனவர் முருகேசன் புகார்படி, ராஜிவ்காந்தி, நேசத்தமிழன் மீது எட்டு பிரிவுகளில், ஆத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதேபோல், நேசத்தமிழன் அளித்த புகாரில், 'ஏரி குடிலில் அமர்ந்து சாப்பிட்டபோது, வனச்சரகர் உள்ளிட்ட அலுவலர்கள், 'மாட்டுக்கறி எடுத்து வந்து சாப்பிடக்கூடாது' என இழுத்துச்சென்று தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.