/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறை அலுவலரை திட்டிய 4 கைதி மீது வழக்கு
/
சிறை அலுவலரை திட்டிய 4 கைதி மீது வழக்கு
ADDED : அக் 29, 2025 01:38 AM
சேலம் துாத்துக்குடியை சேர்ந்த ரவுடி மதன்குமாரை, கடந்த ஜூலையில், சேலம், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து, துாத்துக்குடியை சேர்ந்த ஹரிபிரசாத், இசக்கிராஜா, செல்வபூபதி, ரிஷி கபூர் ஆகியோரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
நேற்று அவர்கள், சிறை மாடிப்படியில் அமர்ந்துள்ளனர். அவர்களை, அறைகளுக்கு செல்லும்படி சிறை அலுவலர் மனோஜ் கூறினார். ஆனால் அவர்கள், மனோஜை தகாத வார்த்தைகளில் திட்டி பணிபுரியவிடாமல் தடுத்தனர்.இதுகுறித்து மனோஜ் தகவல்படி, சிறை அதிகாரி, அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதனால், 4 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

