/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி ஆவணம் தயாரித்து நிலம் 'கிரயம்' மருத்துவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 16, 2025 02:02 AM
தாரமங்கலம், சேலம், பெரமனுார் சாலை, நாராயண பிள்ளை தெருவை சேர்ந்தவர் வாணி, 67. இவரது இரு மகன்கள், வெளியூரில் வேலை செய்கின்றனர். இவரது கணவர் சின்னகண்ணன், 1996ல் இறந்துவிட்டார். தெசவிளக்கு ஊராட்சியில் வாணிக்கு சொந்தமாக இருந்த, 38.5 சென்ட் நிலத்தை, அவரது கணவரின் அண்ணன் சித்தனுக்கு, 2011 ஜூன், 9ல், 'பவர்' செய்து கொடுத்தார்.
சித்தன், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, மனைவி சின்னத்தாய் பெயருக்கு, 2020 டிச., 21ல் போலியாக கிரயம் செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அதே நாளில் அறிந்த வாணி, நிலத்தை தன் பெயருக்கு மாற்றித்தர கேட்டார். அதற்கு சித்தன், சின்னத்தாய் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வாணி கடந்த ஜூன், 24ல் சேலம் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
அதில், 'நிலத்தை போலியாக கிரயம் செய்த சித்தன், சின்னத்தாய், அதற்கு சாட்சி கையெழுத்திட்ட ராஜேந்திரன், விக்னேஷ்வர், ஆவண எழுத்தர் பிரபு, வாணி கணவர் உயிருடன் இருப்பதாக கையெழுத்திட்ட தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதையடுத்து தாரமங்கலம் போலீசார், ரஞ்சித் உள்பட, 6 பேர் மீது நேற்று
வழக்குப்பதிந்தனர்.