/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.40 லட்சம் செலுத்தாமல் மோசடி நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு
/
ரூ.1.40 லட்சம் செலுத்தாமல் மோசடி நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு
ரூ.1.40 லட்சம் செலுத்தாமல் மோசடி நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு
ரூ.1.40 லட்சம் செலுத்தாமல் மோசடி நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு
ADDED : செப் 11, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சீலநாயக்கன்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள, 'ஆசீர்வாத் மைக்ரோ பைனான்ஸ்' நிதி நிறுவனம் மூலம் ஏராளமானோருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளத. அத்தொகை வசூலிக்க, கள வளர்ச்சி ஊழியர்களாக, தீபன் கார்த்தி, பிரிட்டோ ராஜ் செயல்பட்டனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து வசூலித்த, 1.40 லட்சம் ரூபாயை, நிறுவனத்தில் கட்டவில்லை. இது, வட்டார மேலாளர் ஹரிஹரன் மேற்கொண்ட தணிக்கையில் தெரியவந்தது. இதுகுறித்து ஹரிஹரன் நேற்று அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார், தீபன் கார்த்தி, பிரிட்டோராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.