/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏட்டுக்கு 'பளார்' விட்டதாக தந்தை - மகன் மீது வழக்கு
/
ஏட்டுக்கு 'பளார்' விட்டதாக தந்தை - மகன் மீது வழக்கு
ஏட்டுக்கு 'பளார்' விட்டதாக தந்தை - மகன் மீது வழக்கு
ஏட்டுக்கு 'பளார்' விட்டதாக தந்தை - மகன் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2025 01:23 AM
இடைப்பாடி, இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் சாகித், 33. இவர் இடைப்பாடி போலீசில் அளித்த புகார் மனு:புகார் தொடர்பான விசாரணைக்கு அழைக்க, செட்டிமாங்குறிச்சி, லட்சுமணகவுண்டனுாரில் உள்ள வேல்மணி, 27, வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றேன். தொடர்ந்து, 'உங்கள் மீது புகார் உள்ளது
அதுகுறித்து விசாரிக்க, இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவேண்டும்' என, கூறினேன். அதில் எனக்கும், வேல் மணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேல்மணி, என் கன்னத்தில் அறைந்தார். அவரது தந்தை கந்தசாமி, 66, என்பவரும் தாக்கினார். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதனால் தந்தை, மகன் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.