/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணுக்கு மிரட்டல் வி.சி., நிர்வாகி மீது வழக்கு
/
பெண்ணுக்கு மிரட்டல் வி.சி., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஆக 21, 2025 02:19 AM
சேலம், இ.கம்யூ., 26வது தமிழ் மாநில மாநாட்டில் பங்கேற்க, கடந்த, 15ல், வி.சி., தலைவர் திருமாவளவன் சேலம் வந்தார். அப்போது அவர், சேலம், 5 ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது, தீவட்டிப்பட்டி அடுத்த நாச்சனம்பட்டியை சேர்ந்த மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலர் பெருமாயி, 45, அவரது உறவினர் ஷாலினி ஆகியோர் சந்தித்து, கட்சி பிரச்னை, குடும்ப பிரச்னை குறித்து முறையிட்டுள்ளனர்.
இதையறிந்த கட்சியின் வடக்கு மாவட்ட செயலர் தெய்வானை, 48, 'என்னை பற்றி திருமாவளவனிடம் எப்படி புகார் அளிக்கலாம்' என கேட்டு, பெருமாயியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, பெருமாயி அளித்த புகார்படி,
சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.