/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவரிடம் மோசடி இருவர் மீது வழக்கு
/
மருத்துவரிடம் மோசடி இருவர் மீது வழக்கு
ADDED : பிப் 11, 2025 07:32 AM
சேலம்: சேலம், கந்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர், நரம்பியல் மருத்துவராக உள்ளார். இவரிடம் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ஜோசியர் செல்வராஜ் என்பவர் சிகிச்சைக்காக வந்-துள்ளார். அப்போது
ஜோசியர், பட்டு புடவையில் தங்க ஜரிகை இணைக்கும் தொழில் செய்து வருவதாக மருத்துவரிடம்
தெரி-வித்துள்ளார். இதை நம்பிய மருத்துவர் ஜெனிபர், மூன்று பட்டு புடவை, 50 ஆயிரம் ரூபாய்
கொடுத்துள்ளார்.இதையடுத்து, தனது நண்பர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அக்னி தேவன் என்பவர்,
இந்த தொழிலை சிறந்த முறையில் செய்து வருகிறார். அவரிடம் கொடுத்து செய்து தருவதாக
கூறியுள்ளார். அதன் பின், செல்வராஜ் கூறியபடி புடவையில் ஜரிகை வைத்து கொடுக்கவில்லை.
இதனால் புடவையும், பணத்தையும் ஜெனிபர் திருப்பி கேட்-டுள்ளார். ஆனால் அவர்கள் தரவில்லை. இது
குறித்து சூரமங்-கலம் போலீசில் ஜெனிபர் அளித்த புகார்படி, செல்வ ராஜ், அக்னி-தேவன் ஆகியோர் மீது
வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

