/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினர் 156 பேர் மீது வழக்குப்பதிவு
/
ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினர் 156 பேர் மீது வழக்குப்பதிவு
ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினர் 156 பேர் மீது வழக்குப்பதிவு
ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வினர் 156 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : டிச 06, 2024 07:19 AM
சேலம்: வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, சேலம் மரவனேரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் முன், வங்கதேச இந்து மீட்புக்குழு சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 156 பேரை, அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து இரவில் விடுவித்தனர்.
ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பெரிய ஏரி வி.ஏ.ஓ., ராஜசேகர் புகார்படி, ஆர்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சிவகாளிதாஸ், சேலம் கோட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலர் காளிதாஸ், மாநகர், மாவட்ட பா.ஜ., தலைவர் சுரேஷ்பாபு, மாநில வக்கீல் பிரிவு செயலர் நாச்சிமுத்துராஜா உள்பட, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.