/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தியேட்டர் உரிமையாளர் மகளுக்கு வரதட்சணை கொடுமை பெங்களூருவை சேர்ந்த கணவன், மாமியார் மீது வழக்கு பதிவு

ADDED : டிச 10, 2024 07:50 AM
சேலம்: தியேட்டர் உரிமையாளர் பெண்ணி டம், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம், ஏ.ஆர்.ஆர்.எஸ்., மல்டிபிளக்ஸ் உரிமையாளர் கீதா ராம-நாதன் மகள் ஸ்ரீரேகா தேவி, 33. இவர், அஸ்தம்பட்டி போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்.,
லேஅவுட் பகுதியை சேர்ந்த டாக்டர் கணேஷ், 39, என்பவருடன், 2020ல் எனக்கு திருமணம் நடந்து, மூன்று
வயதில் மகன் உள்ளார். திருமணம் நிச்சயமானதில் இருந்தே, என் பெற்றோரிடம் வரதட்சணையாக,
நகை, கார் என பல்வேறு வகை-களில் பணம் கேட்டு நச்சரித்து வந்தனர். வளைகாப்பு முடிந்து, வீட்டுக்கு
நான் கிளம்பிய போது, என் நகைகள், 250 பவுன், வைர நெக்லஸ் ஆகியவற்றை கணவரின் தங்கை பிரியா, 35,
அவர்களது தாய் சுகந்தி, 58, ஆகியோர் பிடுங்கி வைத்துக்கொண்டு, கேவல-மாக திட்டி அனுப்பினர்.திரும்ப குழந்தையுடன் வரும் போது, மருத்துவமனை கட்ட, ரூ.10 கோடியுடன்தான் வர வேண்டும்.
இல்லாவிட்டால், பிறந்த வீட்டிலேயே இருந்து விடு என மிரட்டினர். அதன்பின்பும், குழந்-தையை கடத்தி
செல்ல முயற்சித்தது, வரதட்சணை கேட்டு துன்பு-றுத்துவதுமாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.
திருமணத்தின் போது வரதட்சணையாக தரப்பட்ட, 250 பவுன் நகை, 30 கிலோ வெள்ளி உள்ளிட்ட
பொருட்கள், கல்விச்சான்றிதழ் ஆகியவை அவர்களிடம் உள்ளது. ரூ.10 கோடி அல்லது 100 பெட் கொண்ட
மருத்துவமனைகட்டித்தர வேண்டும் என துரத்திய  நிலையில், நான் தாய் வீட்டில் வசித்து வருகிறேன்.
அவர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.இதன் அடிப்ப-டையில் அஸ்தம்பட்டி
போலீசார், கணேஷ், அவரது தாய் சுகந்தி, தங்கை பிரியா உள்ளிட்டோர் மீது வரதட்சணை கொடுமை
உள்-ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.