/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உதவி செயற்பொறியாளர் வீட்டில் பணம், நகை திருட்டு
/
உதவி செயற்பொறியாளர் வீட்டில் பணம், நகை திருட்டு
ADDED : மார் 18, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, புது ஏரி ரோடு, தாமரை நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 56. தஞ்சாவூரில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளராக பணிபுரிகிறார்.
இவரது மனைவி, கடந்தாண்டு ஜூலை இறந்ததால், அவரது இரு மகள்களும், சேலம்  வின்சென்ட்டில் உறவினர் வீட்டில் வசிக்கின்றனர். இருவரும் நேற்று காலை, 11:30 மணிக்கு தாமரை நகரில் பூட்டியிருக்கும் வீட்டுக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 40,000 ரூபாய், 50 கிராம் வெள்ளி பொருட்கள், 2 கிராம் தங்க மூக்குத்தி திருடுபோனது தெரிந்தது.
கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

