/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துப்பாக்கி குண்டு பாய்ந்த குழந்தை காப்பாற்றிய -காவேரி மருத்துவமனை
/
துப்பாக்கி குண்டு பாய்ந்த குழந்தை காப்பாற்றிய -காவேரி மருத்துவமனை
துப்பாக்கி குண்டு பாய்ந்த குழந்தை காப்பாற்றிய -காவேரி மருத்துவமனை
துப்பாக்கி குண்டு பாய்ந்த குழந்தை காப்பாற்றிய -காவேரி மருத்துவமனை
ADDED : ஜூலை 23, 2025 01:32 AM
சேலம், நாட்டு துப்பாக்கியில் இருந்து தவறுதலாக வெளி வந்த தோட்டாக்கள் பாய்ந்து ஆண் குழந்தை படுகாயம் அடைந்த நிலையில், சேலம், காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. உடனே குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணர் முகமது பாசில், குழந்தைகள் மயக்கவியல் நிபுணர் கோகுல கண்ணன், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் விஜயபாஸ்கர், அறுவை சிகிச்சை இரைப்பை குடல் நிபுணர் அருண் அடங்கிய பல்துறை மருத்துவ குழுவினர் செயல்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் தோட்டாக்களை அகற்றி, குழந்தை உயிரை
காப்பாற்றினர்.
இதுகுறித்து மருத்துவர் முகமது பாசில் கூறியதாவது:
ஒன்றரை வயது குழந்தையின் வயிறு, தொடையில் குண்டுகள் பாய்ந்து, காலில் எலும்பு முறிவையும் ஏற்படுத்தியிருந்தன. அதிக ரத்த இழப்பு இருந்ததால், உடனே ரத்தம் ஏற்றினோம். எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் எடுத்ததில், இரு குண்டுகள் இருந்தன. ஒன்று குடலை துளைத்து உள்ளே இருந்தது. மற்றொன்று தொடையில் பதிந்திருந்தது.
குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் இணைந்து, அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டோம். எலும்பு முறிவுக்கு கட்டு போடப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன், பின், பல்துறை நிபுணர்களின் கவனிப்பு, தொடர்ச்சி
யான கண்காணிப்பு தேவைப்
பட்டது.
விரைவான ஒருங்கிணைப்பு, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவால், குழந்தை உயிர் காப்பாற்றப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டு, குழந்தை, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.