/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரிக்கு பிறந்த நாள் விழா இரு மாநில எல்லையில் வழிபாடு
/
காவிரிக்கு பிறந்த நாள் விழா இரு மாநில எல்லையில் வழிபாடு
காவிரிக்கு பிறந்த நாள் விழா இரு மாநில எல்லையில் வழிபாடு
காவிரிக்கு பிறந்த நாள் விழா இரு மாநில எல்லையில் வழிபாடு
ADDED : அக் 17, 2024 09:49 PM
மேட்டூர்:கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. காவிரி கர்நாடகாவில், 320 கி.மீ., தமிழக - கர்நாடகா எல்லையில் 64 கி.மீ., தமிழகத்தில், 416 கி.மீ., பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
பல யுகங்களுக்கு முன், அகத்தியர் தன் கமண்டலத்தை தற்போதைய குடகு மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வைத்துள்ளார். அப்போது, காகமாக உருவெடுத்த விநாயகர் கமண்டலத்தை கீழே தள்ளினார். அதில் இருந்த தண்ணீர் ஆறாக ஓடியதாக கர்நாடகா, தமிழக விவசாயிகள் நம்புகின்றனர். கர்நாடகாவில் ஆண்டுதோறும் அக்., 17ஐ காவிரி பிறந்த நாளாக கொண்டாடுகின்றனர்.
அந்த நாளில் கர்நாடகா கரையோரம் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் காவிரியை வழிபாடு செய்து, சிறிது நீரை பாத்திரத்தில் எடுத்து சென்று. பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்கின்றனர். கர்நாடகாவில், நேற்று கரையோர மக்கள் காவிரிக்கு சென்று வழிபாடு செய்தனர்.
இந்நிலையில், தமிழக - கர்நாடகா எல்லையில் துணை ஆறுகளில் ஒன்றான பாலாறு, காவிரியில் கலக்கிறது. அப்பகுதியில் நேற்று மாதேஸ்வரன் மலை மல்லிகார்ஜூனா சுவாமிகள் தலைமையில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, ேஹாமம் நடத்தப்பட்டது. பின், பெருக்கெடுத்து செல்லும் காவிரிக்கு தீபாராதனை காட்டி விவசாயிகள் வழிபாடு செய்தனர். இதில், தமிழக எல்லையிலுள்ள விவசாயிகள், பெண்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.