/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
/
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
ADDED : பிப் 16, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: நாடு முழுதும், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் ஜெய்ராம், செந்தில் பப்ளிக் பள்ளிகள், வாகீஸ்வரி வித்யாலயா, வித்யாமந்திர் உள்-பட, 8 மையங்களில், 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் தேர்வு எழுதினர்.
முதல் நாளில் ஆங்கில தேர்வு நடந்தது. பாடத்திட்டத்துக்குள் வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால், எளிதாகவே இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மார்ச், 18 வரை தேர்-வுகள் நடக்க உள்ளன. நாளை சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ளது.

