ADDED : ஜூன் 22, 2024 01:00 AM
ஓமலுார் : சேலம் பெரியார் பல்கலையில் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், உடற்கல்வித்துறை சார்பில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில், 200 மாணவ, மாணவியருக்கு, யோகா பயிற்றுனர் மோதிலால் நேரு பயிற்சி அளித்தார். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பத்மசேகரன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், உடற்கல்வித்துறை இயக்குனர் வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் ஓமலுார், ஆர்.சி.செட்டிப்பட்டி அரசு உதவி பெறும் புனித நிக்கோலஸ் நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், யோகாவில் பங்கேற்ற மாணவ, மாணவியரை பாரட்டினார். தலைமை ஆசிரியர் லியோபால் உள்பட பலர் பங்கேற்றனர். 'வாழ்க வளமுடன்' அமைப்பு சார்பில், மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 572 மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கிளாடிஸ் மேரி(பொ) உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆத்துார் நீதிமன்றம்ஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் தலைமையில் மாஜிஸ்திரேட் முனுசாமி, தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு மாநில இணைச்செயலர் ராமதாஸ், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல் ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது.