/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விசாரணை கைதியிடம் சிக்கிய மொபைல், சிம்கார்டு பறிமுதல்
/
விசாரணை கைதியிடம் சிக்கிய மொபைல், சிம்கார்டு பறிமுதல்
விசாரணை கைதியிடம் சிக்கிய மொபைல், சிம்கார்டு பறிமுதல்
விசாரணை கைதியிடம் சிக்கிய மொபைல், சிம்கார்டு பறிமுதல்
ADDED : டிச 20, 2024 01:05 AM
சேலம், டிச. 20-
சேலம் மத்திய சிறையில், விசாரணை கைதியிடம் மொபைல்போன், சிம்கார்டு, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்து, உறவினர்கள் சந்திக்க மூன்று மாதம் தடை விதித்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை, காசிமேடு பகுதியை சேர்ந்தவர் மதன், 30. கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குளில் இவர் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்.,30ல், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று மதியம் இவர், மொபைல்போன் பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து, சிறை சோதனை குழுவினர் நடத்திய விசாரணையில், அவரிடம் இருந்து மொபைல்போன், சிம்கார்டு, பேட்டரி இருப்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சிறை கண்காணிப்பாளர் வினோத், சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, சிறையில் மொபைல்போன் பயன்படுத்திய மதனை சந்திக்க, உறவினர்களுக்கு மூன்று மாதம் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.