/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைதிகளிடம் மொபைல், சிம் கார்டு பறிமுதல்
/
கைதிகளிடம் மொபைல், சிம் கார்டு பறிமுதல்
ADDED : ஜன 04, 2025 02:50 AM
சேலம், ஜன.
4--
சேலம் மத்திய சிறையில் நேற்று, வார்டன்கள் சோதனை நடத்தினர். அப்போது கைதிகள் மோகன்ராஜ், 25, சதீஷ்குமார், 25, ஆகியோரிடம் சிம் கார்டு கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது, யுகேந்திரன், 26, என்ற கைதி கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து கைதி ரசீத், 36, மண்ணில் புதைத்து வைத்திருந்த மொபைல் போனையும் மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, கைதி நீலகண்டன், 30, கொடுத்து வைத்திருந்ததாக கூறினார். இதனால் மொபைல் போன், சிம் கார்டுகளை கைப்பற்றி, சிறை எஸ்.பி., வினோத் விசாரித்தார். பின், சம்பந்தப்பட்ட, 5 கைதிகளும், உறவினர்களை சந்திக்க, 3 மாதங்கள் தடை விதித்தார். மேலும், 5 பேர் மீது அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.