/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மயானம் ஆக்கிரமிப்பு; பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
மயானம் ஆக்கிரமிப்பு; பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 05, 2025 10:44 AM
மேட்டூர்: மேச்சேரி டவுன் பஞ்சாயத்து, 7வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் விமல். இவர், மேலாண்டி-யூரில் மயானம் அருகே, 11 சென்ட் நிலம் வாங்-கினார். தொடர்ந்து அருகே உள்ள மயான நிலத்தை ஆக்கிரமித்து, வேலி அமைத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் மயான நிலத்தை, தி.மு.க., கவுன்-சிலரிடம் இருந்து மீட்டு, மேலாண்டியூர் மக்க-ளிடம் ஒப்படைக்கக்கோரி, மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே, சேலம் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், நேற்று காலை, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமை வகித்து பேசுகையில், ''தி.மு.க., கவுன்சிலர் விமல் ஆக்கிரமித்த நிலத்தை, இரு நாட்களில் வரு-வாய்த்துறையினர் அளவீடு செய்து மீட்டுத்தர வேண்டும். இல்லை எனில் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.
இதுகுறித்து கவுன்சிலர் விமல் கூறுகையில், ''மேலாண்டியூரில் பல தலைமுறையாக கந்தன்-ஐயர் என்பவருக்கு பல ஏக்கர் அனுபவ நிலம் உள்ளது. அந்த நிலத்தின் ஒரு பகுதியை அவர் வேறு ஒருவரிடம் விற்ற நிலையில், அவரிடம் இருந்து பாதைபுறம்போக்கு நிலத்தில், 20 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினேன். அந்த நிலம் தொடர்பான வழக்கு மேட்டூர் உரிமையியல் நீதி-மன்றத்தில் நடக்கிறது. மேலாண்டியூர் மக்க-ளுக்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய, 2 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலம் போதாது என நான் வாங்கிய அனுபவ நிலத்தை கேட்கின்-றனர். அந்த நிலத்தை மீட்டு கிராம மக்களுக்கு தருவதாக, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்-ளனர்,'' என்றார்.

