/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநாட்டில் 30,000 பேர் பங்கேற்க மத்திய மாவட்ட தி.மு.க., ஏற்பாடு
/
மாநாட்டில் 30,000 பேர் பங்கேற்க மத்திய மாவட்ட தி.மு.க., ஏற்பாடு
மாநாட்டில் 30,000 பேர் பங்கேற்க மத்திய மாவட்ட தி.மு.க., ஏற்பாடு
மாநாட்டில் 30,000 பேர் பங்கேற்க மத்திய மாவட்ட தி.மு.க., ஏற்பாடு
ADDED : ஜன 13, 2024 04:03 AM
சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க., அலுவலகத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் தலைமை வகித்தார். மேயர் ராமச்சந்திரன், பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலரான, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கட்சியினருடன், தி.மு.க., இளைஞரணி, 2வது மாநில மாநாட்டில் பங்கேற்பது, பொங்கல் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.அதில் வரும், 21ல் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடக்க உள்ள மாநாட்டில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி, முன்னதாக, 20ல் வருவதால், ஓமலுார் தொகுதி சார்பில் வரவேற்பு அளிப்பது; மாநாட்டில் மத்திய மாவட்டம் சார்பில், 30,000 பேரை பங்கேற்க செய்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தேர்தல் பணிக்குழு செயலர் தாமரைச்செல்வன், மாநகர செயலர் ரகுபதி, மத்திய மாவட்ட துணை செயலர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மஞ்சுளா, மாநகர் அவைத்தலைவர் முருகன், துணை செயலர்கள் கணேசன், தினகரன், மண்டல குழு தலைவர்கள் அசோகன், தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.