தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மத்திய அரசின் ஆதார் மையம் திறப்பு

மத்திய அரசின் ஆதார் மையம் திறப்பு

மத்திய அரசின் ஆதார் மையம் திறப்பு


ADDED : ஜூலை 15, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:மத்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் ஆதார் சேவை மையம், சேலம், மெய்யனுார் சாலையில் அமைக்கப்பட்டு, அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. ஆணைய இயக்குனர் பவன்குமார் தலைமை வகித்தார். சேவை மையத்தை, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பவன்குமார் பேசியதாவது: மத்திய அரசு சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டு வருகின்றன. 8வது மையமாக சேலத்தில் தொடங்கப்பட்டது. இதில், 8 'கவுன்டர்'கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அனைத்து நாட்களும் ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் செலுத்தி, சேவையை பெறலாம். ஆகஸ்டுக்குள் மேலும், 22 மாவட்டங்களில் இந்த மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us