உறிஞ்சு மோட்டார்களை அகற்ற எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
உறிஞ்சு மோட்டார்களை அகற்ற எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 15, 2026 05:18 AM
மேட்டூர்:உறிஞ்சு மோட்டார்களை மக்கள் அகற்றிக்கொள்ள மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் அறிவுறுத்தினார்.
மேட்டூர் நகராட்சி, 7, 8வது வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த, 9 காலை, தொப்பூர் - பவானி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, அ.தி.மு.க.,வின், மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் தலைமையில், தங்கமாபுரிபட்டணத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் தங்கமாபுரிபட்டணத்தில் பெரும்பாலான வீடுகளில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி தொட்டிகளில் நிரப்புகின்றனர். மோட்டார் இருந்தால், உரிமையாளர்கள் அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லை எனில் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து மோட்டாரை பறிமுதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குடிநீர் வினியோகம், 10 நாட்களுக்குள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.எல்.ஏ., தெரிவித்தார். நகராட்சி கமிஷனர் குமரன்(பொ), தலைவி சந்திரா, மக்கள் பங்கேற்றனர்.
