/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மத்திய சிறை பெட்ரோல் பங்க் ஜூலையில் பயன்பாட்டுக்கு வரும்'
/
'மத்திய சிறை பெட்ரோல் பங்க் ஜூலையில் பயன்பாட்டுக்கு வரும்'
'மத்திய சிறை பெட்ரோல் பங்க் ஜூலையில் பயன்பாட்டுக்கு வரும்'
'மத்திய சிறை பெட்ரோல் பங்க் ஜூலையில் பயன்பாட்டுக்கு வரும்'
ADDED : ஜூன் 02, 2025 06:43 AM
சேலம்,: சேலம் மத்திய சிறையில், 1,300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் நன்னடத்தை கைதிகள், 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் மூலம் சிறை வளாகத்தில் பேக்கரி, துணி உற்பத்தி, கோழி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. இந்நிலையில், 2020ல் பெட்ரோல் பங்க் அமைக்க ஒப்புதல் கிடைத்தது. அப்போது கொரோனா பிரச்னையால் பணி நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து இடம் தேர்வு செய்வதில் சிக்கல் இருந்தது. தற்போது, ஒரு மாதமாக, கட்டுமானப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது:சிறை வளாகத்தில், 1,800 சதுரடியில், பங்க் கட்டுமான பணி நடக்கிறது. இம்மாத இறுதியில் பணி முடிந்து, ஜூலை முதல் வாரம், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதில் பணியாற்ற, நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுழற்சி முறையில், 24 மணி நேரமும், பங்க்கில் பணிபுரிவர். இதன்மூலம் தண்டனை முடிந்து வெளியே செல்லும் கைதிகளுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களும், இந்த பங்க்கை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக, பெண் கைதிகள் வேலை செய்யும்படி பங்க் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.