/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் அலுவலகம் பிரிப்பு பிரிவு எண்கள் மாற்றம்
/
மின் அலுவலகம் பிரிப்பு பிரிவு எண்கள் மாற்றம்
ADDED : செப் 09, 2025 01:46 AM
சேலம், மின் அலுவலகம் பிரிக்கப்பட்டுள்ளதால், மகுடஞ்சாவடி பகுதிகளில், பிரிவு எண்களும் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி மின் செயற்பொறியாளர் சங்கசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:
சங்ககிரி கோட்டத்தில் அமைந்துள்ள மகுடஞ்சாவடி பிரிவு அலுவலகத்தினை பிரித்து, புதிதாக கிழக்கு மகுடஞ்சாவடி பிரிவு அலுவலகம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுந்தம், மகுடஞ்சாவடி பிரிவுகளின் சில மின் பகிர்மான எண் மற்றும் பிரிவு அலுவலக எண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, எஸ்.எம்.புதுார், அ.புதுார், அழகனுார், கவுண்டனேரி, அம்மன்கோவில் காடு, கரையானுார் ஆகிய பகுதிகளில் பிரிவு எண்
மாற்றப்பட்டுள்ளது.
எனவே மின் பகிர்மானங்களை சார்ந்த மின் நுகர்வோர், தங்களுடைய மின் இணைப்பு எண், பகிர்மான எண், பிரிவு அலுவலக எண் மற்றும் மின் இணைப்பு உரிமையாளர் பெயர் ஆகியவற்வை சரிபார்த்து, மின் கட்டணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதில் சந்தேகம் ஏற்படின், சம்பந்தப்பட்ட பிரிவு உதவி பொறியாளரை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்
பட்டுள்ளது.