sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பராமரிப்பு பணிகளால் கோவை, திருச்சி ரயில்களில் மாற்றம்

/

பராமரிப்பு பணிகளால் கோவை, திருச்சி ரயில்களில் மாற்றம்

பராமரிப்பு பணிகளால் கோவை, திருச்சி ரயில்களில் மாற்றம்

பராமரிப்பு பணிகளால் கோவை, திருச்சி ரயில்களில் மாற்றம்


ADDED : அக் 10, 2025 01:50 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை, திருச்சி ரயில்களில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி-முத்தரசன்நல்லுார் இடையே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. எனவே அக்., 11, 14, 17 தேதிகளில் புறப்படும் ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூர் முதல் திருச்சி வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட தேதிகளில் மதியம், 1:00 மணிக்கு கிளம்ப வேண்டிய திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ், கரூரில் இருந்து மதியம், 2:20 மணிக்கு கிளம்பும். திருச்சி முதல் கரூர் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. அக்., 11, 14, 17 தேதிகளில் காலை 6:30 மணிக்கு கிளம்பும் பாலக்காடு-திருச்சி ரயில், முத்தரசநல்லுார் வரை மட்டும் இயக்கப்படும். முத்தரசநல்லுார் முதல் திருச்சி வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.

அக்., 12 ல், கோவை வடக்கு ரயில்வே யார்டில் வழித்தட பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அன்று காலை 9:40 மணிக்கு கிளம்பும் போத்தனுார்-மேட்டுபாளையம் மெமு ரயில், மதியம் 1:05 மணிக்கு கிளம்பும். மேட்டுபாளையம்-போத்தனுார் மெமு ரயில் ரத்து செய்யப்படுகிறது. அக்., 12, காலை 6:00 மணிக்கு கிளம்பும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ், காலை, 9:10 மணிக்கு கிளம்பும் எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகியவை போத்தனுார், இருகூர் வழியே இயக்கப்படும். கோவை ஜங்ஷன் செல்லாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us