/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரவக்குறிச்சி அருகே பஸ்கள் மோதிய விபத்தில் உயிர் தப்பிய பயணிகள்
/
அரவக்குறிச்சி அருகே பஸ்கள் மோதிய விபத்தில் உயிர் தப்பிய பயணிகள்
அரவக்குறிச்சி அருகே பஸ்கள் மோதிய விபத்தில் உயிர் தப்பிய பயணிகள்
அரவக்குறிச்சி அருகே பஸ்கள் மோதிய விபத்தில் உயிர் தப்பிய பயணிகள்
ADDED : அக் 10, 2025 01:50 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பள்ளப்பட்டியில் இருந்து, கரூர் நோக்கி பயணிகளுடன் அரசு பஸ், தனியார் பஸ் ஒன்றையொன்று முந்திக்கொள்ளும் வகையில் சென்றது. அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்புறம், பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் புறப்பட்டது. அந்த நேரத்தில், அரசு பஸ் முன்பாக திடீரென ஒரு கார் கடந்து சென்றுள்ளது. இதனால் அரசு பஸ் டிரைவர் அவசரமாக பிரேக் போட்டுள்ளார்.
அந்த சமயத்தில் பின்னால் அதி வேகத்தில் வந்த தனியார் பஸ், திடீர் பிரேக்கை கவனிக்காமல் அரசு பஸ்சின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் பின்புற கண்ணாடிகள் சிதறின. பஸ் பயணிகள் பீதியடைந்து சத்தமிட்டபடி கீழே இறங்கினர். இருந்தபோதும், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்தால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.
அந்த இடத்தில் பொதுமக்கள் திரண்டனர்.
அரவக்குறிச்சி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர். விபத்தால், ஒரு மணி நேரத்திற்கு மேல் அரவக்குறிச்சி-பள்ளப்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார், போக்குவரத்தை சீரமைத்து பஸ்களை சாலையிலிருந்து அகற்றினர்.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.