/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரோடு - கரூர் பாதை ரயில் சேவையில் மாற்றம்
/
ஈரோடு - கரூர் பாதை ரயில் சேவையில் மாற்றம்
ADDED : அக் 01, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:ஈரோடு - கரூர் தடத்தில் உள்ள பல்வேறு பாலங்களில் பொறியியல் பணி நடக்க உள்ளது. இதனால் அக்., 3, 9 ஆகிய நாட்களில் காலை, 7:20க்கு புறப்படும், திருச்சி - ஈரோடு பயணியர் ரயில், கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
அதே நாட்களில் காலை, 5:10க்கு கிளம்பும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதியம், 2:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், மதியம், 3:05க்கு கரூரில் இருந்து கிளம்பும். இரு மார்க்க ரயில்களிலும் ஈரோடு முதல் கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது.