/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாறிவரும் குடும்ப சேமிப்பு பழக்கம் மியூச்சுவல் பண்டு, காப்பீட்டில் அதிகரிக்கும் முதலீடு

ADDED : டிச 24, 2024 08:00 AM
புதுடில்லி: நம் நாட்டில் பாரம்பரிய சேமிப்பு வழிகள் மாறி, கடந்த மூன்று ஆண்டுகளில், வங்கி டிபாசிட்டுகள் குறைந்து ஆயுள் காப்பீடு, மியூச்சுவல் பண்டு முதலீடு கள் அதிகரித்துள்ளன.இதுகுறித்து, எஸ்.பி.ஐ., யின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியர்களின் வீட்டு சேமிப்பு வழக்கங்களில் வேகமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டில், குடும்ப மொத்த சேமிப்-பில், வங்கி டிபாசிட்டுகள் 47.60 சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்தன. அது 2023ல் 45.20 சதவீதமாக சரிந்துள்ளது.
கடந்த, 2021ம் ஆண்டில் 20.80 சதவீதமாக இருந்த ஆயுள் காப்பீ-டுக்கான செலவழிப்பு, 2023ல் 21.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலும் இந்தியர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. 2021ல் 7.60 சதவீதமாக இது இருந்த நிலையில், 2023ல் 8.40 சதவீதமானது.இந்திய குடும்பங்களின் ஒட்டுமொத்த சேமிப்பு விகிதமும் உயர்ந்து வருவதை புள்ளிவிபரம் காட்டுகிறது. இதில் சர்வதேச சராசரி 28.20 சதவீதம் என்ற நிலையில், அதைத் தாண்டி, இந்திய சேமிப்பு விகிதம் 30.20 சதவீதமாக உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவைகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்-ததும் இதற்கு காரணம்.