/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கோவிந்தா' கோஷம் அதிர திருக்கோடி தீபம் ஏற்றி பூஜை புரட்டாசி முதல் சனி கோலாகலம்
/
'கோவிந்தா' கோஷம் அதிர திருக்கோடி தீபம் ஏற்றி பூஜை புரட்டாசி முதல் சனி கோலாகலம்
'கோவிந்தா' கோஷம் அதிர திருக்கோடி தீபம் ஏற்றி பூஜை புரட்டாசி முதல் சனி கோலாகலம்
'கோவிந்தா' கோஷம் அதிர திருக்கோடி தீபம் ஏற்றி பூஜை புரட்டாசி முதல் சனி கோலாகலம்
ADDED : செப் 22, 2024 05:03 AM
சேலம்: புரட்டாசி முதல் சனியையொட்டி, பல்வேறு கோவில்களில் 'கோவிந்தா' கோஷமதிருக்கோடிதீபம் ஏற்றி பூஜை நடந்ததபுரட்டாசி முதல் சனியான நேற்று, சேலத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோட்டை பெருமாள் கோவிலில் காலை பெருமாள், தாயார், ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயருக்கு, 'பச்சை செந்துார காப்பு' அலங்காரம் செய்து திருக்கோடி ஏற்றி பூஜை நடந்தது.
செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், பட்டைக்கோவில், அம்மாபேட்டை சவுந்தரராஜர், ஆனந்தா இறக்கம் அருகே லட்சுமி நாராயணர், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தன.
ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடி லட்சுமி நாராயணர் கோவிலில் பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பலவித பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. மூலவர், உற்சவர்களுக்கு துளசி மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு காட்டப்பட்ட தீபாராதனையில் இருந்து மண் சட்டியில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு, பக்தர்களின், 'கோவிந்தா' கோஷம் முழங்க, கோவிலை வலம் வந்து கொடி மரத்தின் முன் உள்ள கல்மரத்தில் திருக்கோடி ஏற்றப்பட்டது.
காளிப்பட்டி சென்றாய பெருமாள், பெத்தாம்பட்டி சென்றாய பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்துடன் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
கண்காணிப்பு
காடையாம்பட்டி காருவள்ளி வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் தொடங்கியது. பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். தீவட்டிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகம் முழுதும், 25 கேமரா பொருத்தி, போலீஸ் கண்காணிப்பு அறையில், 'டிவி' மூலம் கண்காணிப்பட்டது. கோவில் மண்டபத்தில் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பக்தர்கள், கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்கு, 4 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.
ஊர்வலம்
தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்தனர். அதேபோல் அமரகுந்தி ஊராட்சி கரிய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் காரினியாச்சிக்காரர்கள், ஸ்ரீதேவி, பூதேவி, கரியபெருமாள்
உற்சவமூர்த்தியை, சின்னாக்கவுண்டம்பட்டியில் இருந்து தோளில் சுமந்து செல்ல, பெண்கள் பூஜை தட்டுடன், 'கோவிந்தா' கோஷம் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோவிலில் சுவாமிக்கு பூஜை செய்து மூலவர் கரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கரியபெருமாள் உற்சவமூர்த்தியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
கிரீடம் அணிவிப்பு
ஆத்துார், கோட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவர் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு பல்வேறு அபி ேஷக பூஜை செய்யப்பட்டது. பின் புஷ்பம், துளசி அலங்காரத்துடன் கிரீடம் அணிந்து வைகுண்ட நாராயண பெருமாள் அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலித்தார். அதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சின்னமசமுத்திரத்தில், 2,200 அடி உயரத்தில் உள்ள கொப்புக்கொண்ட பெருமாள் கோவிலுக்கு, 1,900 கருங்கல் படி வழியே ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டனர்.
இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் திருக்கோடி தீபம் ஏற்றி பூஜை நடந்தது. சங்ககிரி மலை சென்னகேசகவ பெருமாள், கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. அதேபோல் மாவட்டம் முழுதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
வெங்கடாஜலபதி அலங்காரம்
சேலம், அம்மாபேட்டை பாபு நகரில் வளர்பிறை நண்பர் குழு சார்பில், 26ம் ஆண்டாக நேற்று சுதர்சன யாகம் செய்து சுப்ரபாத பாராயணத்துடன் பந்தலில் அலர்மேல்மங்கை தாயாருடன் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்து, விஸ்பரூப தரிசனத்துடன் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, 4 கால பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் நடந்த சிறப்பு பூஜையில், 2,001 சுமங்கலி பெண்களுக்கு, திருமாங்கல்ய கயிறுகள், வளையல்கள் வழங்கப்பட்டன.