ADDED : ஜூலை 12, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில், கடந்த, 2ல் சக்தி அழைத்தலுடன் தேர் திருவிழா தொடங்கியது.
தொடர்ந்து அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, 30 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரை, ஏராளமான பக்தர்கள், 'ஓம் சக்தி... பராசக்தி' கோஷம் எழுப்பிய நிலையில், முக்கிய வீதிகள் வழியே இழுத்துச்சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் வழிபட்டனர்.