/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாரியம்மன் கோவிலில் 9, 10ல் தேர் திருவிழா
/
மாரியம்மன் கோவிலில் 9, 10ல் தேர் திருவிழா
ADDED : மார் 31, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி, கொட்டவாடி பிரிவு சாலை அருகே, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 25ல் கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் நடந்தது. நாளை காப்பு கட்டுதல் நடக்க உள்ளது.
வரும் ஏப்., 7ல் சின்னகிருஷ்ணாபுரம் பெரியசாமி, கருப்பணார் சுவாமிக்கு பொங்கல் வைத்தல், 8ல் ஊர் மாரியம்மன் சுவாமிக்கு பொங்கல் வைத்தல், பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 9ல் பொங்கல் வைத்தல், ஆடு, கோழி வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தல், தேர் வடம் பிடித்து இழுத்தல், 10ல் மீண்டும் வடம் பிடித்து இழுத்து தேர் நிலை நிறுத்தல், சத்தாபரணம் நடக்க உள்ளது. 11ல் கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டம் நடக்க உள்ளது.