/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் சாமிநாதபுரத்தில் தேர் பவனி விழா
/
சேலம் சாமிநாதபுரத்தில் தேர் பவனி விழா
ADDED : செப் 09, 2025 01:47 AM
சேலம், சாமிநாதபுரம் அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தில், நேற்று தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது.
சேலம் சாமிநாதபுரத்தில் உள்ள, அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயத்தின், 42வது ஆண்டு பெருவிழா ஆக., 30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மாலையில், நவநாள் திருப்பலி நடந்தது. இதில், சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று தேர்பவனி நடந்தது. சேலம் மறைமாவட்ட முதன்மை குழு மைக்கேல் ராஜ் செல்வம், தேர் மந்திரிப்பு செய்து, தேர் பவனியை தொடங்கி வைத்தார். சாமிநாதபுரம் பிரதான சாலை, அரிசிபாளையம் வழியே மீண்டும் தேர், ஆலயத்தை வந்தடைந்தது. குழந்தை இயேசு பேராலயத்தின் பங்குத்தந்தை ஜெய் பெர்னார்டு ஜோசப், உதவி பங்குத்தந்தை சகாயராஜ் மற்றும், 500க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.