ADDED : செப் 06, 2024 07:43 AM
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் கும்பாபிேஷகம் நடத்த, 2022 ஆக., 22ல் மூலவர் கரபுரநாதர், பெரியநாயகி அம்மனை தவிர்த்து மற்ற பரிவார தெய்வங்கள், கோபுரங்களுக்கு, 'பாலாலயம்' செய்து திருப்பணி தொடங்கியது.
பக்தர்கள், உபயதாரர்களால், 2 கோடி ரூபாய் மதிப்பில் பணி நடந்து வரும் நிலையில் கோவில் நந்தவனத்தில் கான்கிரீட் தரைத்தளத்துடன், 30 அடி உயரம், 15 அடி அகலத்தில், கோவில் நிதியில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் கொட்டகை, கடந்த ஏப்ரலில் கட்டப்பட்டது. இந்நிலையில், 4 மாதங்களுக்கு பின் நேற்று, தகர அட்டைகளால் மூடப்பட்டிருந்த தேரை வெளியே எடுத்து தண்ணீரால் சுத்தப்படுத்தி பூஜை செய்து, கிரேன் உதவியுடன் புது கொட்டகைக்குள் முதல்முறை தேர் நிலை நிறுத்தப்பட்டது. செயல் அலுவலர் சோழமாதேவி, குருக்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும் கோவில் வளாகத்தை சுற்றி, 20 அடி உயரத்தில் பழமையான கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கு, அழுக்குகளை அதிக அழுத்தத்துடன் வெளியேறும் காற்றுடன் மணல் கலந்து அடித்து நீக்கும் பணி நடந்து வருகிறது. இது முடிந்த பின் கோவில் முழுதும் வண்ணம் அடித்து, 2026 தையில் கும்பாபி ேஷகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பாபி ேஷக திருப்பணியில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, சோழமாதேவி தெரிவித்தார்.