ADDED : ஏப் 28, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி வெள்ளாண்டிவலசில் உள்ள துாய செல்வநாயகி ஆலயத்தின், 371ம் ஆண்டு பெருவிழா, கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
விழா நிறைவாக நேற்று முன்தினம் நள்ளிரவு தேர் பவனி தொடங்கியது. வெள்ளாண்டிவலசு, சிவகாமி நகர், ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வந்த பவனி, நேற்று அதிகாலை நிறைவடைந்தது. இதில் பாதிரியார் இன்னாச்சிமுத்து உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

