/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சென்ன கேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடல்
/
சென்ன கேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடல்
சென்ன கேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடல்
சென்ன கேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடல்
ADDED : ஏப் 28, 2025 07:01 AM
சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரி மலை மீதுள்ள சென்ன கேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா வரும், 2ல் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அன்றே சுவாமி, மலையில் இருந்து நகருக்குள் எழுந்தருளும் வைபவத்துடன் விழா தொடங்கும்.
அடுத்த மாதம், 10ல் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளும் பெரிய தேர் வடம்பிடித்தல், 20ல் சுவாமி திருமலைக்கு மீண்டும் திரும்புதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தேர் திருவிழாவின் முதல்கட்டமாக பெரிய தேர் அலங்கரிக்கும் பணிக்கு, தேரில் வைத்து கட்டப்படும் குச்சிகளை வைத்து, சுவாமி தங்கும் மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அந்த குச்சிகளை தேரில் பொருத்தி, அமாவாசை நாளான நேற்று பூஜை செய்தனர். திரளான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா வரும், 2ல் தொடங்க உள்ளதால், நேற்று சிறப்பு பூஜை செய்து, தேரை அலங்கரிக்க நிலை பெயர்த்தனர்.