ADDED : ஜூலை 06, 2026 01:12 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி பகுதிகளுக்கு பயணியர் விமான சேவை இயக்கப்படுகிறது.
அதில் சென்னை - சேலம் இடையே இயக்கப்படும் விமானம், நேற்று தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பயணியருக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று வழக்கம்போல் விமானம் இயக்கப்படும் என, இண்டிகோ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
