தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் கரூரில் இருந்து புறப்படும்

செங்கோட்டை எக்ஸ்பிரஸ் கரூரில் இருந்து புறப்படும்

செங்கோட்டை எக்ஸ்பிரஸ் கரூரில் இருந்து புறப்படும்


ADDED : ஜூலை 06, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கரூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டில், மறு சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் அந்த மார்க்கத்தில் சில ரயில்கள் இயக்கத்தில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், மதியம், 2:00 மணிக்கு பதில், 3:05க்கு கரூரில் இருந்து புறப்படும். ஈரோடு - கரூர் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்க ரயில், நாளை அதிகாலை, 5:20 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படும். அங்கு யார்டு பணி நிறைவடைந்ததும், முன்பதிவற்ற ரயிலாக மாற்றி, ஈரோட்டுக்கு இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us